தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் பின்னணி பாடகி ஒருவரை காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் நடிகைகளின் போட்டோக்களுக்கு ஹார்டின் கமெண்ட்டுகளை பதிவிடுவதை இவர் நிறுத்தியதே இல்லை.
மேலும் அடிக்கடி தன்னைத் தானே மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடன் சேர்த்து நடிகர் சிம்புவை கலாய்த்து உள்ளார்.
இன்னும் ஐந்து வருடம் ஆனால் எல்லோருக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் ஆனால் எனக்கும் சிம்புவுக்கும் மட்டும் கல்யாணம் ஆகி இருக்காது என பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
😬😬😬 @SilambarasanTR_ pic.twitter.com/d2UbOCXuFl
— PREMGI (@Premgiamaren) March 9, 2022