Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் நெல்சனுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா?.. செய்தியாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்

actor rajinikanth-latest-interview

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. பலமொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வெளியான குறுகிய நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதற்கிடையில் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்று இருந்த நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினர். அப்போது, ரஜினியிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்கள் மீண்டும் நெல்சனுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்ப அதற்கு ரஜினிகாந்த், ‘அதை பற்றி இனிமேல் தான் யோசிக்க வேண்டும்’ என பதிலளித்திருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.

actor rajinikanth-latest-interview
actor rajinikanth-latest-interview