95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. ஆர்.ஆர்.ஆர் சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் அதில், ” ஆஸ்கர் விருது வென்றமைக்கு கீரவாணி, ராஜமௌலி மற்றும் ரீ கார்திகி கொன்சால்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது வணக்கங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.
— Rajinikanth (@rajinikanth) March 13, 2023