Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காந்தாரா படத்தை புகழ்ந்து பேசிய ரஜின்காந்த்..வைரலாகும் பதிவு

actor rajinikanth-tweet-about-kantara-movie

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் ரஜினி எப்போதும் தனது படங்களில் மட்டும் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, எந்தெந்த நல்ல படங்கள் வெளியாகிறதோ அந்த படங்களை பார்த்துவிட்டு அப்பாடா குழுவினர்களை பாராட்டி வருவார். அந்த வகையில் தற்போது கன்னட மொழியில் வெளியான “காந்தாரா” படம் பற்றி புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், ‘தெரிந்ததை விட தெரியாதது அதிகம் ” இந்த விஷியத்தை கந்தாரா திரைப்படம் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். என் உடல் சிலிர்த்தது. ரிஷப் ஷெட்டி, எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என உங்கள் பணி சிறப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் சிறப்பான படத்தை கொடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், படகுழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.