தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மகள் பெயர் ஜீனத் பிரியா. இவர் தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரன் சீரியலில் சம்பந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஜாதி மதங்களை கடந்த இவர்கள் காதல் மலர்ந்ததால் காதலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இரண்டு குடும்பத்தாரும் புரிந்துகொண்டு சமரச பேச்சுவார்த்தையுடன் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜீனத் பிரியாவின் அம்மா மட்டுமே தற்போது வரை திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
விரைவில் அனைவரது ஆசிர்வாதத்துடன் அனைவர் முன்னிலையிலும் திருமணம் நடக்கும் என முனீஸ் ராஜா கூறியுள்ளார்.