தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்தவர்களில் ஒருவர் ராமதாஸ். 1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
அதன் பிறகு இவரது இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. அதேபோல் நடிகராக வசூல்ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மரணம் அடைந்துள்ளார். இவரது மறைவு திரையில் சோகத்தை ஏற்படுத்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
