Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசன் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து காந்தாரா இயக்குனர் போட்ட பதிவு.

actor rishab shetty thanking post about kamalhaasan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வரும் இவர் அவ்வப்போது மற்ற கலைஞர்களின் திரைப்படங்களையும் பாராட்டி தனது கருத்துக்களை பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் பல மொழிகளில் வெளியாகி ₹400 கோடிக்கு மேல் வசூலித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த காந்தாரா திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி இருப்பதை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கடிதம் மூலம் வாழ்த்து மடல் ஒன்றை இயக்குனர் ரிஷப் ஷெட்டிருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அதனை புகைப்படமாக பகிர்ந்திருக்கும் ரிஷப் ஷெட்டி “இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இந்தப் பாராட்டு வருவது மிகப்பெரியதாக கருதுகிறேன். இந்த அருமையான எதிரபாராத பரிசை பார்த்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த அரியப் பரிசினை கொடுத்ததற்கு நன்றி கமல் சார்” என்று பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.