Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பஞ்சுருளி தெய்வத்தை நேரில் சந்தித்த ரிஷப் ஷெட்டி.வைரலாகும் போட்டோ

actor rishab shetty twitter post video viral update

கன்னட திரை உலகில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்திருந்தது.

முதலில் கன்னட திரைப்படமாக வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க படகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், நிஜ காந்தாராவான பஞ்சுருளி தெய்வத்தை நேரில் சென்று வணங்கி ஆசிர்வாதம் பெரும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.