டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ‘சும்மா சில்லு சில்லுனு வருவோம்’ என்று குறிப்பிட்டுள்ளது
Feb 2 Summa sillu sillu nu Varom!!!
@karthikyogitw @akash_megha @peoplemediafcy @vishwaprasadtg @vivekkuchibotla @nuttypillai@tridentartsoffl
@negativespace04 @EditorShivaN @RSeanRoldan #Rajesh @sherif_choreo… pic.twitter.com/OoskJNK69y— Santhanam (@iamsanthanam) January 7, 2024