தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இதன் வரவேற்பை தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வரும் கார்த்தி இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கார்த்தி எப்போதும் சில கிண்டலான பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷாவிடம் அவர் கிண்டலாக உரையாடிய சில பதிவுகளும் சில மாதங்களுக்கு முன்பு வைரலானது.
தற்போது அதேபோல் நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தில் லேடி கட்டத்தில் அசத்தி இருந்த சந்தானத்தின் புகைப்படத்தை பதிவிட்டு “வாடி என் கரீனா சோப்ரா” என குறிப்பிட்டு ஜாலியாக கிண்டல் செய்துள்ளார். அதற்கு “வந்துட்டேன் வந்தியதேவன் மாமா” என க்யூட் ரிப்ளை கொடுத்திருக்கும் சந்தானத்தின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
