தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். பல ஹிட் படங்களை கொடுத்து சுப்ரீம் ஸ்டாராக வளர்ந்த இவர் தற்போதும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
முதலில் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் பேப்பர் போடும் பையனாக தனது வேலையை தொடங்கி அதன் பிறகு பத்திரிக்கையாளராக பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் டிராவல் ஏஜென்சி நடத்தி பிறகு தெலுங்கு படம் ஒன்றில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் சொந்த தயாரிப்பில் கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்ட இவர் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
ஒரு படத்திற்கு ரூ 3 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சரத்குமாரின் மொத்த சொத்து மதிப்பு கிட்டதட்ட ரூ 159 கோடி என தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.