ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் தளபதி விஜய். மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற இவர் தற்பொழுது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷாம், குஷ்பூ என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. அதில் பெரிய பழுவேட்டையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் அவர்கள் ப்ரோமோஷன் ஒன்றில் தளபதி விஜய் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது, நடிகர் சரத்குமார் விஜயின் வாரிசு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதால் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்று இருக்கும் “பொன்னி நதி” என்ற பாடலை அவ்வப்போது பாடிக்கொண்டே இருப்பார் என்ற சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
