Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

Actor Senthil tested covid 19 positive

தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68.

கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார்.

மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.