நடிகர் ஷாம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்.
தளபதி விஜய்யுடன் குஷி திரைப்படத்தில் முதலில் நடித்து, பின்னர் 12B திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை பிரபலமாகியது.
நடிகர் ஷாம் கடைசியாக இவர் பார்ட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஷாம் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் மீம்ஸ் ட்ரோல்ஸ் என செம ட்ரெண்ட் ஆகிவருகிறது.
ஆம் அதில் கிளீன் ஷேவ் செய்துள்ள நடிகர் ஷாம், நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் நடிகர் ஷாம் மற்றும் ஆர்யா இருவரும் ஒன்றாக உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..