Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமாவளவனின் பாராட்டிற்கு நெகிழ்ச்சி பதிவின் மூலம் பதில் கொடுத்த சாந்தனு

actor shantanu latest tweet viral update

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாந்தனு. இவரது நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியிருந்த “இராவண கோட்டம்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு திருமாவளவன் அவர்கள் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இது குறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் ஐயா தொல் திருமா அவர்களின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்”. எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இவரது இந்த பதிவு புகைப்படத்துடன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.