கோலிவுட் திரை உலகில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பத்து தல திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் இவர் அண்மையில் வெயிட் லாஸ் பற்றி ரசிகர்களுக்கு கருத்து தெரிவித்து இருக்கிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் உடல் எடை குறைக்க கடுமையாக முயற்சி செய்திருக்கும் போது “வெயிட் மட்டும் வாழ்க்கையில் போட்டுறாதீங்க, அப்படியே போட்டுட்டாலும் குறைக்கணும் நெனச்சிடாதீங்க அப்படியே சந்தோஷமா ஜாலியா வாழுங்க” என அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram