தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் நான்கு நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து படத்தை பார்க்க திரையரங்குகளில் நல்ல கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் பெரிய பங்காற்றியவர் கூல் சுரேஷ் என சொல்லலாம். கடந்த சில மாதங்களாக இங்கு போனாலும் வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என டயலாக்கை வைத்து டிரெண்ட் ஆனார்.
இவர் செய்த பிரமோஷனுக்காக படத்தின் ரிலீஸின் போது படம் பார்த்து வெளியே வந்த இவருக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்து சிம்பு ரசிகர்கள் கொண்டாடினார். அதோடு இவருடன் செல்பி எடுக்க முயற்சி செய்து காரின் மீது ஏறி அவருடைய கார் கண்ணாடியையும் உடைத்தனர்.
இப்படியான நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கூல் சுரேஷ்க்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என சிம்புவிடம் கேட்க அவர் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரியவந்துள்ளது.
ஸ்கூல் சுரேஷ்க்கு சிம்பு செய்த இந்த உதவியை பலரும் பாராட்டு வருகின்றனர்.

Actor simbu-help-to-cool-suresh