தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
41 வயதாகியும் இன்னும் சிங்கிளாகவே இருக்கும் சிம்புவுக்கு தொடர்ந்து பெண் தேடி வருகிறார் டி ராஜேந்தர். அடிக்கடி சிம்புவுக்கும் அவருக்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சிம்புவுக்கும் தெலுங்கு நடிகரின் மகள் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் பரவ தொடங்கியுள்ளது. மேலும் மணப்பெண் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
