தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகிறது.
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெளிநாட்டு நடிகை நாயகியாக நடிக்க பிரேம்ஜி அமரன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட சிவகார்த்திகேயன் பிரேம்ஜி அமரனின் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்கை டேக் செய்துள்ளார். இது என்னுடைய கணக்கு அல்ல, தவறான கணக்கிற்கு டேக் செய்துள்ளீர்கள் என சொல்ல சிவகார்த்திகேயன் மன்னித்துவிடுங்கள் அடுத்த முறையிலிருந்து சரியாக டேக் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Sir sorry🙏from next time wil tag correctly 👍😃😃 @Premgiamaren 🤗
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 9, 2022