தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது அடுத்த படத்தில் தீவிரம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கும் உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், அப்பா.. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே. இன்றைக்கு நான் என்ன செய்தாலும் அதற்கு காரணம் நீங்கள்தான் அப்பா, நீ எனக்கு கற்றுத்தந்த மதிப்பும் தான், நம் கையில் என்ன இருந்தாலும் அதை எப்படி மௌனமாக மற்றவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நீ வாழ்ந்து காட்டியதற்கு ஒரு மகனாக நான் பெருமை படுகிறேன். என்றென்றும் நினைவில் இருப்பாய் அப்பா” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த உருக்கமான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sharing our SK’s Watsapp status here
– Admin#DossAppa70thBirthday pic.twitter.com/J0vMuSRHpz
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2023