Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“என் சகோதரிக்கு பார்த்து மார்க் போடுங்க”: சூப்பர் சிங்கர் நீதிபதிகளிடம் பேசிய சிவகார்த்திகேயன்

actor sivakarthikeyan-fulfills-fan-wish

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 கோலாகலமாகத் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தன்னைச் சந்திக்க ஆசைப்பட்டதாக கூறிய பாடகியை, நேரில் வரவைத்து சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.தமிழ் இசை உலகில் அதிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் பெரியவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பலதரப்பட்ட பின்னணியிலிருந்து தனித்துவமான பல பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஆரம்ப கட்ட எபிசோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனை சந்தித்து பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக தெரிவித்திருந்தார்.தற்போது இவர் தமிழில் எம்.ஏ. பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது. இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார். அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் வேண்டிய காட்சிகள் அனைவரையும் உருக வைத்தது.

actor sivakarthikeyan-fulfills-fan-wish
actor sivakarthikeyan-fulfills-fan-wish