தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகி பாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் மீது உள்ள எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. அந்த சிறப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் தற்போது வரை #Maaveeran என ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து வருகிறது.
#Maaveeran Second Look Poster 🔥@Siva_Kartikeyan⚡@AditiShankarofl @madonneashwin @ShanthiTalkies @Mee_Sunil @DirectorMysskin @iYogiBabu pic.twitter.com/PMdMVzpXOx
— TicketNew (@TicketNew) January 2, 2023