கோலிவுட் திரை உலகில் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. அனுதீப் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தற்போதும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை இயக்கிய பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். ஆக்சன் கதை களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில காரணத்தால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வினுக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையை சரி செய்ய இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.