தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளராக காமெடி நடிகராக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் இவர் நடிகர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார். மேலும் தற்போது நடித்து வரும் படங்களுக்கு இவர் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
இந்தநிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மெரீனா படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என தெரிய வந்துள்ளது. ஆமாம் இந்த படத்திற்காக அவர் வெறும் பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளமாக வாங்கியுள்ளார்.
இதனை சிவகார்த்திகேயன் கூட ஒரு நிகழ்ச்சி மேடையில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
