Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைவது குறித்து சஸ்பென்ஸ் ஆக கூரிய சிவகார்த்திகேயன்.

actor sivakarthikeyan-viral-speech-about-ar-mrugadoss

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் தனக்கான படப்பிடிப்பை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன்

அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘1947 இசை வெளியீட்டு’ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

அப்போது ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மறைமுகமாக அவர் கூறியிருக்கும் தகவலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் ‘7 ஆம்’ விழாவிற்கு ஸ்கிரிப்ட் எழுதினேன். ‘எங்கேயும் எப்போதும்’ விழாவில் தொகுப்பாளராக இருந்தேன். ‘மான் கராத்தே’ படத்தில் ஹீரோவாக நடித்தேன். ‘1947’ பட விழாவில் சிறப்பு விருந்தினராக இருக்கிறேன். என்று வரிசையாக முருகதாசுடனான தனது வளர்ச்சியை கூறிய சிவகார்த்திகேயன் “இன்னும் ஒன்று இருக்கிறது அதை நான் பிறகு சொல்கிறேன்” என்று சஸ்பென்ஸ் வைத்து ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைவதை மறைமுகமாக கூறியிருக்கிறார். இதன் வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.