தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் சாய்பல்லவியின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்தப் படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
