Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் படத்திற்கு விமர்சனம் கொடுத்த சிவக் குமார்..வைரலாகும் பதிவு

actor sivakumar-praises-maamannan-movie

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உட்பட பலர் இணைந்து நடித்த இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அங்கும் பெரிய சாதனையை படைத்து வருகிறது. பலரும் மாமன்னன் திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில் நடிகர் சிவகுமார் இந்த படத்தை பார்த்து தனது கருத்தை தெரிவித்தார்.

மாமன்னன் படமே இல்ல, உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி, பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாக சொல்ல முடியும். திரைப்படம் மூலம் நீங்கள் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் நிறைய இருக்கு.. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.