Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காலம் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டது : விஷ்ணு விஷால் போட்ட பதிவு

actor soori-and-vishnu-vishal-reunion

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இந்தப் படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் பரோட்டா சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்தில் இணைந்து நடித்த பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இப்படி அந்த நிலையில் விஷ்ணு விஷாலின் அப்பாவுக்கும் சூரிக்கும் இடையே பண மோசடியால் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் மாறி மாறி இருவரும் குற்றம் சாட்டிக் கொண்ட நிலையில் விஷ்ணு விஷாலின் சூரியிடம் இருந்து விலகிக்கொண்டார். இப்படியான இவர்களுக்கு இடையான பிரச்சனை சுமூகமாக முடிவடைந்துள்ளது.

சூரி விஷ்ணு விஷால் மற்றும் அவருடைய அப்பா என மூவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனைத்திற்கும் காலம் பதில் சொல்லிவிட்டது என்று பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு