Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக மிரட்டலான உடலமைப்புடன் சூரி வெளியிட்ட புகைப்படம் – வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சூரி.

இந்த படத்தை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

காமெடியனாக மட்டுமல்லாமல் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் மூலமாக ஹீரோவாகவும் திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உள்ளார்.

ஹீரோவாக நடிக்கப் போவதால் சூரி தன்னுடைய உடல் அமைப்பை கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். ஏற்கனவே இவர் சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய உடல் அமைப்பை கட்டுமஸ்தாக மாற்றிய மாஸ்டர் சரவணன் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்

சூரியின் இந்த கெட்டப் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பாருங்க