Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்டண்ட் குழுவிற்கு நன்றி தெரிவித்து சூரி போட்ட ட்வீட். வைரலாகும் பதிவு

Actor Soori latest twitter post

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வளம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து அசத்தியிருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி தொடர்ந்து வசூல் வேட்டையாடி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் ஸ்டன்ட் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கும் சூரியை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பலரும் விடுதலை திரைப்படத்தின் ஸ்டன்ட் காட்சிகளை பாராட்டி வருகின்றனர். அதுக்கு முழு காரணம் மாஸ்டர் பீட்டர் ஹெயின் மற்றும் அவரின் குழுவினரின் அசாத்திய உழைப்பு தான்’ என்று குறிப்பிட்டு ‘நெஞ்சார்ந்த நன்றிகள்’ என்று பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.