தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கடந்த 31ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களால் தொடர்ந்து விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது.
அதில் அவர், விடுதலை முதல் பாகத்தை பிரம்மாண்ட வெற்றி படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. எனக் குறிப்பிட்டு தனது நன்றிகளை விடுதலை படக்குழு சார்பாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
❤️❤️❤️🙏🙏🙏 pic.twitter.com/72TZvZpOhY
— Actor Soori (@sooriofficial) April 3, 2023