Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி

Actor Soori takes vaccine injection

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி, மனைவியுடன் அருகில் இருக்கும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

மேலும் இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று பதிவு செய்து இருக்கிறார்.