கடந்த 2008-ஆம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்தில் சுனைனா நடிப்பு பெரும் கவனம் பெற்றது. இதைத்தொடந்து ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ‘நீர்பறவை’, ‘சமர்’ என பல படங்களில் நடித்தார்.இவர் ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தவிர முன்னணி நடிகர்கள் யாருடனும் சுனைனா ஜோடி சேரவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரெஜினா’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தொடர்ந்து சுனைனா பல வெப் தொடர்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, கையில் டிரிப்ஸ் ஏறுவது போலவும் மூக்கில் டியூப் வைத்திருப்பது போலவும் சுனைனா ‘தம்ஸ் அப்’ சிக்னலுடன் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்த்து, \”எனக்கு சிறிது நேரம் கொடுங்கள். நான் திரும்பி வருவேன்…\” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு விரைவில் குணமடைந்து வருமாறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.