தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் படம் நல்ல வசூலைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.
We are happy to welcome the gorgeous and talented @IamKrithiShetty onboard #Suriya41!@Suriya_offl #DirBala #Jyotika @gvprakash @rajsekarpandian #Balasubramaniem pic.twitter.com/AIvrBXTvlJ
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 28, 2022