தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து கமிட்டாகி நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது கங்குவா படம் முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தில் இரண்டாம் பாக பணிகளில் இறங்கி விட்டார்.
இதனால் வாடிவாசல் திரைப்படம் மீண்டும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக சூர்யா வாடிவாசல் படம் தொடங்குவதற்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடித்து முடித்து விட முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.