தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க உள்ள அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த நிலையில் நடிகர் சூர்யா விஜய் பாணியில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.
அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த பல மாவட்டங்களில் சூர்யா நற்பணி இயக்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்தந்த மாவட்டங்களில் வார்டு ரீதியாக நற்பணி இயக்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என சூர்யா கட்டளையிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜயை போல ரசிகர் மன்றங்களை வலுவாக்கி நடிகர் சூர்யாவும் அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.