தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படியான நிலையில் ரசிகர்களை சந்திக்க சூர்யா தனது நடிப்பில் உருவாக உள்ள அடுத்தடுத்த ஐந்து படங்களின் அப்டேட்டுகளை அள்ளி கொடுத்துள்ளார்.
முதலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் ஷூட்டிங் இருக்கு முன்னர் நாங்கள் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக உள்ள திரைப்படம் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
நான்காவதாக விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக லோகேஷ் தன்னை சந்தித்து கூறிய கதை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இறுதியாக ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருந்த இரும்புக்கை மாயாவி திரைப்படத்தை தொடங்கும் திட்டமும் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து அதிரடியாக ஐந்து படங்களின் அப்டேட்டை கொடுத்த சூர்யாவால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.