தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் திரைப்படம் உருவாக உள்ளது. இதனை சூர்யாவே தயாரிக்கிறார்.
படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது வேறு ஒரு நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆமாம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
