தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மும்பையில் தங்கி இருக்கும் நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
HandSome Hunk #SURIYA 🤍✨ pic.twitter.com/onZLhk6Ofb
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 5, 2023