Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபாஸின் செயலால் மனம் நெகிழ்ந்து போன சூர்யா.!!

actor suriya viral post about prabhas

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதே இடத்தில் தெலுங்கு பிரபல முன்னணி நடிகர் பிரபாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ஆதலால் நடிகர் பிரபாஸ் நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து இரவு விருந்து அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு சூர்யாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சூர்யாவின் படப்பிடிப்பு முடிய தாமதமானதால் இரவு 11 மணிக்கு பிரபாஸை காண ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். ஆனால், அங்கு சென்று பார்த்ததும் சூர்யாவிற்காக 11 மணி வரை சாப்பிடாமல் பிரபாஸ் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். மேலும் நடிகர் பிரபாஸ் தனது வீட்டில் தன் அம்மா கையால் சமைத்த பிரியாணியை எடுத்து வந்துள்ளார். அதன்பின் சூர்யாவை அமர வைத்து பிரியாணி பரிமாறியுள்ளாராம். இதனால் மனம் நெகிழ்ந்து போன சூர்யா நடிகர் பிரபாஸை பாராட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor suriya viral post about prabhas
actor suriya viral post about prabhas