தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
விஜயுடன் யோகி பாபு, செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் படத்தை பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலினிடம் படம் வெற்றியா தோல்வியா என்று கேள்வி எழுப்ப அவர் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் போடி தளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.