Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாய்சேகர் ரிட்டன்ஸ் படம் தோல்வியா? வடிவேலு ஓபன் டாக்

actor vadivelu-about-naai-sekhar-returns-reviews

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் வடிவேலு. அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் சில படங்களில் நடித்த நிலையில் 23ஆம் புலிகேசி படத்தின் காரணமாக வடிவேலுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு பல வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு எப்படி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெறவில்லை. சமீப நாட்களாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்வி காரணமாக வடிவேலு தொடர்ந்து ஹீரோவாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில் வடிவேலு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் யார் வேண்டுமானாலும் எது வேணாலும் பேசலாம், திறந்தவெளி கக்கூஸ் மாதிரி ஆகிவிட்டது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். என்னுடைய படத்துக்கு அப்படித்தான் பேசினார்கள் என கூறியுள்ளார்.

இதனால் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெற்றி என சொல்கிறாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

actor vadivelu-about-naai-sekhar-returns-reviews
actor vadivelu-about-naai-sekhar-returns-reviews