தமிழ் சினிமாவில் வைகைப் புயலாக காமெடியில் கலக்கி எடுத்தவர் நடிகர் வடிவேலு. இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ரெக்கார்ட் போடப்பட்டு பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் கர்ணன் படத்தில் இடம்பெற்ற லால் கதாபாத்திரம் போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் காதல் படங்களை இயக்குவதில் வல்லமை படைத்த கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள காதல் படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்ததாக துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு சில காட்சிகளை முடித்து விட்டு வடிவேலு படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.