தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக தனக்கென தனி இடத்துடன் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருப்பவர் வடிவேலு. வைகைப்புயல் என்று அனைவராலும் கொண்டாடப்படும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் மூலம் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலுவின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதாவது, 1997 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது வென்ற “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” என்ற படத்தை ரீமேக் செய்து அதில் நான் நடிக்க நீ இயக்க வேண்டும் என்று வடிவேலு ஆசையாக மாரி செல்வராஜிடம் கூறியதாக சமீபத்திய பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். தற்போது அப்படம் தொடர்பான புதிய தகவலாக அப்படத்திற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் அதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.