தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது முழு நேர அரசியலில் இறங்கி அமைச்சராக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கடைசி படம் என மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
ஆனால் மாரி செல்வராஜ் முதல் முதலில் இந்த படத்தில் நடிகர் சார்லியை நடிக்க வைக்க தான் முடிவு செய்துள்ளார். பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்துள்ள இவர் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருப்பார் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
வடிவேலு எப்படியும் இந்த படத்தில் நடிக்க மாட்டார் இருந்தாலும் ஒருமுறை கேட்டு பார்க்கலாம் என அவரை அணுகிய போது அவர் நடிக்க ஓகே சொல்லவே மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.