ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த சில நாட்களாகவே மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.
அந்த தகவல்களை நாம் பார்த்திருப்போம். பிரபலங்களும் ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தாலும் தற்போது அவரவர் இடத்திற்கு வந்துள்ளனர்.
ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என விவேக், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் எல்லாம் வீடியோ வெளியிட்டார்கள்.
அஜித் இன்று காலை வாக்குச் சாவடி திறக்கும் முன்பே ஓட்டு போட முதல் ஆளாக தனது மனைவியுடன் வந்து நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் விஜய்யும் தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ,
சென்னை நீலாங்கரையில் சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்#Vijay | #Chennai | #TNPollsonNews18 | #ElectionsWithNews18 | https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/99ZvzAbni5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 6, 2021