தெலுங்கு திரை உலகில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் தேவரகெண்டா. இந்தப் படத்தைத் தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தமிழிலும் நோட்டா என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
இப்படியான நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லிகர் திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்த விஜய் தேவர் கொண்டா படம் தோல்வியில் முடிந்ததால் தனது சம்பளத்திலிருந்து ஆறு கோடியை திருப்பித் தந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது மட்டுமல்லாமல் ஜனகனமன என அடுத்த படத்திலும் இதே இயக்குனருடன் கூட்டணி அமைத்து நடித்து வருவதால் இந்த படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. விஜய் தேவர் கொண்டா சம்பளம் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். படம் வெற்றி பெற்ற பிறகு படத்தில் ஷேர் கொடுத்தால் போதும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
