Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பெண்கள் குறித்து மனம் திறந்து பேசிய விஜய் தேவர கொண்டா

Actor vijay-devarkonda-is-afraid-of-women

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான லிகர் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விஜய் தேவர்கொண்டாவின் முதல் பான் இந்தியா படமான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் பற்றி ரசிகர்களின் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சமீபத்தில் எடுத்த பேட்டியில் விஜய் தேவர்கொண்டா தனக்கு பெண்களைப் பார்த்தாலே பயம் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது, சிறுவயதில் ஆண்கள் பள்ளியில் படித்ததால் தனக்கு18 வயது வரை பெண்களைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருக்கும் என்றும் பெண்களை வேற்று கிரகவாசிகள் போல பார்த்ததாக கூறியுள்ளார்.

மேலும் தனது 18 வயது வரை பெண்களின் கண்களை பார்த்து பேசத் தெரியாது எனவும் மனம் திறந்து பேசியுள்ளார். இப்படி இவர் பகிர்ந்து இருக்கும் இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

Actor vijay-devarkonda-is-afraid-of-women
Actor vijay-devarkonda-is-afraid-of-women