தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாகும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் பறவைகள் விலங்குகளின் பெயரில் வெளியான படங்கள் தோல்வியை தழுவியுள்ளது.
என்னென்ன படங்கள் என்பது குறித்த லிஸ்ட் இதோ
1. குருவி
2. சுறா
3. புலி
4. பீஸ்ட்
இந்த நான்கு படங்களும் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை பெற்றன. இப்படியான நிலையில் தற்போது விஜய் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
லியோ என்றால் சிங்கம் என்றும் பொருள் என்பதால் இதுவும் விலங்கு பெயரில் உருவாகும் படம் என்பதால் இது எப்படியான ரிசல்ட் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுவரை விலங்குகளின் பெயரில் வெளியான படங்கள் விஜய்க்கு ராசி இல்லை என்ற நிலையை லோகேஷ் கனகராஜ் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
