தென்னிந்திய திரை உலகில் ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு ட்விட்டர் கணக்கில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள பட்டியலில் விஜய் கடைசி இடத்தை பிடித்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோவரசை கொண்டுள்ள நடிகர்கள் குறித்த பட்டியலை Oneindia Tamil வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தை நடிகர் மகேஷ்பாபு பிடித்திருக்கிறார், அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் நடிகர் தனுஷும், 3வது இடத்தில் சூர்யாவும் பிடிக்க கடைசி இடத்தில் தளபதி விஜய் இடம்பெற்று இருக்கிறார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பயங்கரமாக பரவி வருகிறது.
#CINEMAUPDATE | ட்விட்டர் – கடைசி இடத்தில் விஜய்!https://t.co/MuX1YHqxAw#SouthIndianActors #TwitterFollowers #Dhanush #Vijay #Suriya #MaheshBabu #ட்விட்டர் #Oneindiatamil pic.twitter.com/3rmEU3797S
— Oneindia Tamil (@thatsTamil) October 30, 2022